[X] Close

திருப்பத்தூர்: "இனி எங்களால் வாழ முடியாது"- மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்

குற்றம்

Tirupattur--Husband-try-to-Kill-wife

திருப்பத்தூர் அருகே மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் தலைமறைவாகியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கும் கந்திலி அடுத்த கொட்டாவூர் பகுதியில் வசிக்கும் திவ்யா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து. வர்ஷினி ஸ்ரீ என்கிற ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவனை பிரிந்த திவ்யா தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திவ்யாவின் அம்மா வீட்டிற்கு சென்ற சத்தியமூர்த்தி, கோயிலுக்கு போகலாம் எனக் கூறி திவ்யாவை அழைத்து சென்றுள்ளார். கோயிலுக்கு போவதாக கூறி திவ்யாவை அழைத்துச் சென்ற சத்தியமூர்த்தி பாலில் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார்.


Advertisement

இதனால் மயக்கம் அடைந்த திவ்யாவை திருப்பத்தூர் எலவம்பட்டி பகுதியிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில், தூக்கிச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். திவ்யா அலறும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், எரிந்த நிலையில் இருந்த திவ்யாவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

image

பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு எரிந்த நிலையில் இருந்த திவ்யாவை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.


Advertisement

இந்த நிலையில் சத்தியமூர்த்தி தனக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. இனி எங்களால் வாழ முடியாது. அதனால் எனது மனைவியை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனவே என்னை தேடாதீர்கள். என் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் பரவ விட்டு தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close