[X] Close

வெற்றி பெற்றதாக கொண்டாட்டத்தில் மூழ்கிய இந்திய வீராங்கனைகள்.. அதிர்ச்சி கொடுத்த ’நோ’ பால்

சிறப்புக் களம்

Aussie-women-s-team-continuing-their-winning-streak-and-the-dominate-in-ODI-cricket-by-Defeating-India

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 26 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அந்த அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் 26-வது வெற்றியை பெற்றுள்ளது. 


Advertisement

image

உண்மையில் இந்தப் போட்டியில் கடைசி சில நிமிடங்களில் டி20 போட்டியின் பரபரப்பு கொஞ்சமும் குறைவில்லாமல் இருந்தது என்றே சொல்லலாம். அதுவும் கடைசி ஓவரின் கடைசி பந்து நெஞ்சை கொஞ்சம் படபடக்க வைத்தது. இருக்கையின் நுனியில் அனைவரையும் வரவழைத்தது. எப்படியும் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் வேண்டிக்கொண்டிருந்தனர். ஆனால், முடிவு வேறுவிதமாக சென்றதுதான் துரதிருஷ்டம்.


Advertisement

image

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. 


Advertisement

இந்தப் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 274 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்ததாக விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 44 ரன்கள் எடுத்தார். 

image

52 ரன்களுக்குள் 4 விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பே விக்கெட்டை பறிகொடுத்தது. அடுத்து 11 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டாவது விக்கெட்டையும் இழந்த அந்த அணி 52 ரன்னிற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அந்த நேரத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பது போல் தான் தோன்றியது. 

ஆனால், எல்சி மூனி (Mooney), தஹிலா மெக்ரத், நிக்கோலா கேரே என மூன்று பேர் வரிசையாக சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டனர். தொடக்கத்தில் எல்சி மூனி - மெக்ரத் இணை சிறப்பாக விளையாடி 126 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. தஹிலா மெக்ரத் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேரே பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேர்க்க, சிறப்பாக விளையாடி வந்த மூனி தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் 10 முதல் 15 பந்துகளை இடைவெளி இருந்து கொண்டேதான் இருந்தது. அதனால் எப்படியும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே வந்தது.

image

கடைசி ஓவரில் 13 ரன் தேவை

கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஜூலான் கோஸ்வாமி வீசியிருந்தார். தேவையில்லாத எக்ஸ்ட்ரா பந்துகளை அவர் வீசியதால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை வசமாக்கியது. சில பந்துகளை அவர் சிறப்பாக வீசினாலும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு ரன்கள் எடுத்து அசத்தினர்.

இருப்பினும், கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பந்தில் ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்தால் வெற்றி பெறலாம் என இந்திய வீராங்கனைகள் நினைத்திருந்தனர். ஜூலான் வீசிய புல்டாஸ் பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்தே கேரே பவுன்டரிக்கு விளாச அது ஸ்கொயர் லெக் திசையில் கேட்ச் பிடிக்கப்பட்டது. போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இந்தியா வெற்றி பெற்றதாகவே எண்ணி கொண்டாடி தீர்த்தனர். அதேபோல், இந்திய  வீராங்கனைகளும் வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.

image

அதிர்ச்சி கொடுத்த நோ பால்

ஆனால், பந்து இடுப்புக்கு மேலே வீசப்பட்டது போல் தெரிந்ததால் மூன்றாவது நடுவரிடம் நோ பால் ஆக இருக்குமா என சரிபார்க்கப்பட்டது. நீண்ட நேரத்தில் பந்து எந்த அளவில் வந்து பேட்டில் படுகிறது என சோதிக்கப்பட்டது. அது ரசிகர்களை பதற்றத்தில் வைத்தது. இறுதி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அது 'நோ-பால்' என அறிவிக்கப்பட்டது. இந்திய வீராங்கனைகளும் மிகவும் அப்செட் ஆகிவிட்டார்கள். 

இரண்டு ரன்னா? ஒரு ரன்னா? என குழப்பம்

நோ-பால் என அறிவிக்கப்பட்டதால் அதற்காக ஒரு ரன்னும், ஓடி எடுத்ததாக ஒரு ரன்னும் என முதலில் இரண்டு ரன்கள் வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் ரிப்ளேவில் சரிபார்க்கப்பட்ட போது கேட்ச் பிடிக்கும் தருணத்தில் க்ரீசின் பாதி அளவை வீராங்கனைகள் கடக்கவில்லை என்பதால் அது ரன் கணக்காக சேர்க்கப்படவில்லை. அதனால், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை. ஒரு வேளை ஒரு ரன் விட்டுக் கொடுத்தால் டிரா ஆகலாம். 

ஜூலான் வீசிய அந்த பந்தை கேரி நேராக லாங் திசையில் அடித்தார். பந்தினை பீல்டர் எடுத்து வீசுவதற்குள் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இரண்டு ரன்களை மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார்கள். ஆஸ்திரேலிய அணி வெற்றிக் கனியை பறிவிட்டது. இந்திய அணி வாய்ப்பு இருந்து கனியை பற்கொடுத்துவிட்டது.

இந்திய மகளிர் அணி தோற்றது ஏன்?

இந்திய வீராங்கனைகளின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக கடைசி நேரத்தில் 10 முறைக்கு மேல் சொதப்பினர். விக்கெட் கீப்பரும் கொஞ்சம் சொதப்பினார். மிதாலி ராஜ்ஜின் கேப்டன்சியும் சொல்லும்படியாக இல்லை. ஆஸ்திரேலிய வீராங்கனைகள் செட்டில் ஆகி இருந்ததால் பதற்றம் இல்லாமல் பேட்டிங் செய்தனர். துல்லியமான ஷாட்களை விளையாடினர். 

மூனி 133 பந்துகளில் 125 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல், நிக்கோலா கேரே 38 பந்துகளில் 39 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையும் படிக்கலாம் : ஐபிஎல் கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் ரஜினி ரசிகர் : மும்பையை மிரட்டிய வெங்கடேஷ் ஐயரின் கதை! 


Advertisement

Advertisement
[X] Close