[X] Close

MI vs KKR : டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஃபீல்டிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

விளையாட்டு

Mumbai-Indians-Versus-Kolkata-Knight-Riders-plays-in-Match-number-34-of-the-IPL-2021-and-KKR-won-the-toss-elected-to-field-first--

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன், பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார். 


Advertisement

புள்ளிப்பட்டியலில் மும்பை நான்காவது இடத்திலும், கொல்கத்தா ஆறாவது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்கத்துடன் விளையாடுகின்றன. கொல்கத்தா கடந்த போட்டியில் பெங்களூரை வென்ற தெம்புடன் இந்த போட்டியை அணுகுகிறது. மும்பை, சென்னை அணியிடம் இதற்கு முந்தைய போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. 

image


Advertisement

ஐபிஎல் களத்தில் இரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் மும்பை 26 போட்டிகளிலும், கொல்கத்தா 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சீசனில் இந்த இரு அணிகளும் விளையாடிய போது மும்பை வெற்றி பெற்றிருந்தது. 

ஆடும் லெவன் விவரம்..

image


Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா

மும்பை இந்தியன்ஸ்

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சவுரப் திவாரி, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..! 


Advertisement

Advertisement
[X] Close