[X] Close

'டாஸ்மாக்கை சுற்றி வீடுகளே இல்லை'- மாவட்ட நிர்வாகத்தின் பொய்; காஞ்சிபுரம் மக்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு

District-Administration-lying-over-tasmac-issue

காஞ்சிபுரத்தில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், டாஸ்மாக்கை சுற்றி எந்த வீடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் அப்பட்டமாக பொய் கூறியுள்ளது தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் அதிகம் உள்ளன. அதில் சாத்தான் குட்டை தெரு பகுதியில் அமைந்துள்ள சந்தவெளி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு நாளொன்றுக்கு அதிக அளவில் பெண் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். மேலும் இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக குடியிருப்புகள் மத்தியில் டாஸ்மார்க் ஒன்று இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்து செல்லும் பாதையில், மது பிரியர்கள் சாலை ஓரமாக அமர்ந்து மது அருந்துகிறார்கள். மேலும் குடித்த பாட்டிலை சாலையில் உடைத்து விடுகிறார்கள். அதுமட்டுமல்லாது குடித்துவிட்டு தெருவோரத்தில் சண்டை சச்சரவில் ஈடுபடுகிறார்கள். மேலும் குடியிருப்பு வாசலில் போதையில் படுத்து உறங்குகிறார்கள். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர்.

image


Advertisement

இதுதொடர்பாக அந்த குடியிருப்பு பகுதி மக்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு அந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். இந்த மனு தொடர்பாக பதிலளித்துள்ள காஞ்சிபுரம மாவட்ட நிர்வாகம் டாஸ்மார்க் அமைந்துள்ள பகுதியில் எந்த ஒரு குடியிருப்பும் இல்லை என அப்பட்டமாக பொய்யான தகவலை வழங்கி பொதுமக்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றனர்.

image

தவிர, தினசரி அதிகாலையில் இருந்தே அந்த டாஸ்மார்க் வெளியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவல்துறைக்கும் தெரிந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் டாஸ்மாக்குக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.


Advertisement

image

மேலும் டாஸ்மாக்கை அகற்றக்கோரி மனு அளித்தவருக்கு டாஸ்மாக்கில் பார் நடத்தும் நபரொருவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாகவும்கூறப்படுகிறது. தற்போது அந்த ஆடியோ காஞ்சிபுரம் நகரப் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close