[X] Close

உதயசந்திரன் ஐஏஎஸ்-சை இடம் மாற்றம் செய்ய தடை

Udayachandran-banned-the-transfer-of-IAS

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை இடம் மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை தமிழக அரசு இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பாடத்திட்டத்தை மாற்றும் குழு, நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை இடம்மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் பாடத்திட்டத்தை மாற்றும் குழுவில் உள்ள யாரையும் பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.


Advertisement

பாடத்திட்டத்தை மாற்றும் குழு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close