[X] Close

பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - உயிர்தப்பிய தாய் - மகன்

தமிழ்நாடு

Sudden-car-fire-accident-at-Perambalur

பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அதில் சென்ற தாயும் மகனும் நூலிழையில் உயிர்தப்பினர்.


Advertisement

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் தண்டாயுதபாணி(33). இவருக்கு அடுத்தவாரம் 9 தேதி திருமணம் நடக்கவுள்ளதாக தெரிகிறது. அவரும், அவரின் தாய் மாரியம்மாளும் விருத்தாசலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் சென்ற கார் பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லாபுரம் கைகாட்டி அருகே தீடிரென தீப்பிடித்துள்ளது. உடனடியாக காரை நிறுத்திய தண்டபாணி மற்றும் அவரது தாய் மாரியம்மாள் இருவரும் காரில் இருந்த பொருட்களை எடுத்துகொண்டு காரை விட்டு இறங்கி ஓடினர்.

image


Advertisement

இந்த இடைப்பட்ட நேரத்திலேயே காரில் பற்றிய தீ கொழுந்துவிட்டு மளமளவென்று எரியத்தொடங்கியது. சிலநிமிடங்களில் கார்முழுவதும் தீப்பற்றி எரிந்து கரும்புகை சூழ்ந்தது. இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியன் 2 பட பிரச்னை: பேச்சுவார்த்தை நடைபெறுவதாக லைகா - ஷங்கர் தரப்பு தகவல் 


Advertisement

Advertisement
[X] Close