[X] Close

சென்னையில் நாளைமுதல் 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்கள்

கொரோனா வைரஸ்

Vaccination-camps-in-200-wards-in-Chennai-from-tomorrow

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் நாளை முதல் 200 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் 112 கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 26 ஆம் தேதியன்று 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி முகாம்கள் மூலமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பலன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 200 வார்டுகளில் தடுப்புசி முகாம்கள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையும் படிக்க: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,523 பேருக்கு கொரோனா பாதிப்பு 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close