[X] Close

மார்க்வுட் வேகத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி

விளையாட்டு

Indian-Cricket-Team-loses-back-to-back-wickets-in-the-Second-Innings-at-lord-s-against-England

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்ககெட் போட்டியில் விளையாடி வருகிறது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 


Advertisement

இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா அடுத்தடுத்து இங்கிலாந்து பவுலர் மார்க்வுட் வேகத்தில் தங்களது விக்கெட்டை இழந்தனர். 

image


Advertisement

ராகுல் 5 ரன்களிலும், ரோகித் 21 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். புஜாரா மற்றும் கோலி தற்போது களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 20 ரன்களுடனும், புஜாரா 2 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். இந்திய அணி இன்றைய நாள் முழுவதும் தாக்குப் பிடித்து 250 ரன்களுக்கு மேல் எடுத்தால் தான் டிரா செய்யவோ அல்லது வெற்றி பெறவோ வாய்ப்புகள் இருக்கும். இந்திய அணி குறைவான ரன்களில் ஆட்டமிழந்தால் அது இங்கிலாந்து அணிக்கே சாதகமாக அமையும். 

முன்னதாக, லார்ட்ஸில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் நேர ஆட்ட முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் சேர்த்திருந்தது.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், கேப்டன் ஜோ ரூட்டும், பேர்ஸ்டோவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேர்ஸ்டோவ் 57 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஜோ ரூட் சதம் அடித்தார். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 391 ரன்கள் எடுத்து முதல் இ்ன்னிங்சை இழந்தது. ஜோ ரூட் 180 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலை பெற்றது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close