[X] Close

ஒலிம்பிக் மல்யுத்தம்: காலிறுதியில் வினேஷ் போகத் தோல்வி

விளையாட்டு,ஒலிம்பிக்

Vinesh-Phogat-lose-in-qf-wrestling-at-Tokyo-Olympics

டோக்கியோ ஒலிம்பிக்கில் 53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வியடைந்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று 53 கிலோ மகளிர் மல்யுத்தப் பிரிவின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் - பெலராஸ் நாட்டின் வானேசாவும் மோதினர். இதில் வினேஷ் போகத் 3-9 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்.

முன்னதாக காலிறுதிக்கு முந்தையச சுற்றில் வினேஷ் போகத், ஸ்வீடனின் சோபியா மாட்சன் ஆகியோர் மோதினர். இதில் இந்தியாவின் வினேஷ் போகத் 7-1 என்ற புள்ளிக் கணக்கில் சோபியா மாட்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close