மயானத்திற்கு செல்ல பாதை இல்லை: சடலத்தை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

மயானத்திற்கு செல்ல பாதை இல்லை: சடலத்தை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்
மயானத்திற்கு செல்ல பாதை இல்லை: சடலத்தை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டி விடுதி அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் வயல்வெளிகளை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே சடலங்களை தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்யும் துயரம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டி விடுதி அருகே உள்ள களபம் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் தேவைக்காக அந்த ஊரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வயல்வெளிகளை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே சடலங்களை தூக்கிச்சென்று அப்பகுதி மக்கள், எரியூட்டியும் அடக்கம் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அந்த கிராமத்தை சேர்ந்த சின்னப்பா என்பவரது மனைவி பாப்பாத்தி அம்மாள் (65) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது சடலத்தை தோளில் சுமந்தபடி வயல்வெளிகளிலும் தோட்டங்களிலும் பெரும் அவதியோடு நடந்து சென்று 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இதையடுத்து அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து மயானத்திற்குச் செல்ல முறையான சாலை வசதி அமைத்துத் தரவேண்டும், அல்லது சாலை வசதி உள்ள இடத்தில் மயானத்தை அமைத்து தர வேண்டும் என வேதனையோடு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com