[X] Close

ஆப்கானிஸ்தான் ராணுவத் தாக்குதலில் 300 தலிபான்கள் உயிரிழப்பு

உலகம்

Nearly-300-Taliban-killed-hundreds-injured-in-ops-by-Afghan-forces-in-48-hours
ஜூலை மாதத்தில் 70 மாவட்டங்கள் தலிபான்களால் கைப்பற்றப்பட்டிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற துவங்கியதால் தலிபான்களின் ஆதிக்கம் தீவிரம் அடைந்துள்ளன. முதற்கட்டமாக கிராம பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள், அடுத்ததாக நகரங்களை நோக்கி முன்னேற துவங்கி உள்ளனர்.
 
இந்நிலையில், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கந்தகாரை தலிபான்கள் தற்போது குறிவைத்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கந்தகார் விமான நிலையத்தின் மீது அவர்கள் 3 ஏவுகணைகள் வீசி தாக்கினர். இதில், 2 ஏவுகணைகள் விமான நிலைய ஓடு பாதையில் விழுந்து வெடித்தன. இதனால், ஓடு பாதை சேதமடைந்ததைத் தொடர்ந்து நேற்று விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 
image
இதையடுத்து தலிபான்களுக்கும், அரசு ராணுவத்துக்கும் இடையே நகரங்களைச் சுற்றி தீவிர சண்டை நடந்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் பல்வேறு மாகாணங்களில் அரசு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 300 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தலிபான்களால் வைக்கப்பட்ட 13 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.
 
ஜூலை மாதத்தில் மட்டும் 70 மாவட்டங்கள் தலிபான்களால் கைப்பற்றப்பட்டிப்பதாக டோலோ நியூஸ் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களை மீண்டும் மீட்டுவிட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
[X] Close