[X] Close

“நான் வென்ற ஒலிம்பிக் பதக்கத்தை இந்திய நாட்டுக்கு சமர்ப்பிக்கிறேன்” - மீராபாய் சானு

ஒலிம்பிக்

I-dedicate-this-medal-to-my-country-says-Olympic-Silver-Medalist-for-India-in-weightlifting-sports-Mirabai-Chanu

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் மீராபாய் சானு. பளுதூக்கும் விளையாட்டில் வெள்ளி வென்று அசத்தியுள்ளார் அவர். இந்நிலையில் தனது ஒலிம்பிக் பதக்கத்தை நாட்டுக்காக சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

“என்னுடைய கனவு பலித்துள்ளது. இந்த பதக்கத்தை என் நாட்டுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த பயணத்தில் என்னுடன் இருந்த கோடான கோடி இந்திய மக்களுக்கும், அவர்களின் பிரார்த்தனைகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

image


Advertisement

இதற்காக எனது குடும்பமும், எனது அம்மாவும் பல தியாகங்களை செய்துள்ளனர். அரசு, விளையாட்டு அமைச்சகம் என எனது பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எல்லோருக்கும் நன்றிகள். எனது பயிற்சியாளர் விஜய் ஷர்மா சாருக்கு ஸ்பெஷல் நன்றி” என மீரபாய் சானு தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close