யானைகள் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

யானைகள் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்
யானைகள் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

யானைகள் வழித்தடம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானைகள் நல ஆர்வலரான முரளிதரன் தாக்கல் செய்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீலகிரி பகுதியில் யானைகளின் வழித்தடம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய நிலைக்கே கொண்டு வரவும் சர்வதேச அளவிலான நிபுணர்கள் மற்றும் உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஆய்வை மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com