[X] Close

விரைவுச் செய்திகள்: பொதுமுடக்கம் நீட்டிப்பு | நீட் நல்லது - அண்ணாமலை | ஜெர்மனி வெள்ளம்

தமிழ்நாடு

Tamilnadu--India--World-news-till-8-PM

பொதுமுடக்கம் ஜூலை 31 வரை நீட்டிப்பு: மேலும் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஐடிஐ, தட்டச்சு பயிற்சி நிலையங்கள் 50 சதவிகித மாணவர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

ஜூலை 19-ல் +2 மதிப்பெண்கள் வெளியீடு: தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி பிளஸ் 2 மதிப்பெண் வெளியாகிறது. 22ஆம் தேதி முதல் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

‌காவிரி ஆணைய ஒப்புதலின்றி மேகதாதுவுக்கு அனுமதியில்லை: காவிரி மேலாண்மை ஆணைய அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் வழங்கப்படாது என தமிழ்நாட்டு அனைத்துக்கட்சி குழுவிடம் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்திருக்கிறார்.


Advertisement

திட்ட அறிக்கைக்கு தமிழகம் ஒப்புதல் வழங்காது: மேகதாது விரிவான திட்ட அறிக்கைக்கு கர்நாடகா ஒப்புதல் கேட்டால் தமிழக அரசு வழங்காது என்றும், மேகதாது அணைக்கு அனுமதி ஏதும் தரவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்ததாகவும் அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.

3ஆவது அலையை சமாளிக்க தீவிர நடவடிக்கை: கொரே‌னா 3‌வ‌‌‌‌து‌ அலையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடனான காணொலி சந்திப்பில் பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார்.

நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்க: கொரோனா பரவும் சூழல் உள்ளதால், நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

சென்னையில் காற்றுடன் கனமழை: நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்துவருகிறது.

நீட் நல்லது - அண்ணாமலை: நீட் தேர்வு நல்லது என வீடு வீடாகச் சென்று மக்களிடம் சொல்லுவோம் என தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

மணல் கடத்தல் - திமுக நிர்வாகி மீது நடவடிக்கை: திருச்சி மணப்பாறையில் மணல் கடத்தலில் தொடர்புடைய திமுக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்ததாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பி ஓடிய அதிமுக பிரமுகர் கைது: தஞ்சை அருகே கொலைவழக்கு விசாரணையின்போது தப்பிச்சென்று சென்னையில் தலைமறைவாக இருந்த அதிமுக ஒன்றிய செயலாளரை காவல்துறை கைதுசெய்து சிறையில் அடைத்தது.

தலிபான் தாக்குதலில் இந்திய புகைப்படக்கலைஞர் பலி: ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த செய்தி புகைப்படக் கலைஞர் மரணமடைந்தார். அவருக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

ஜெர்மனி வெள்ளம் - 90 பேர் பலி: ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தை வெள்ளம் புரட்டிப்போட்டது. அதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை - ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்: உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளன. 8 அணிகள் இடம்பெறும் பிரிவுகள் விவரங்களை ஐசிசி வெளியிட்டது.


Advertisement

Advertisement
[X] Close