[X] Close

விரைவுச் செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு | பள்ளிகள் திறப்பு-ஆலோசனை

தமிழ்நாடு

Tamilnadu--India--World-news-till-5-PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17%ல் இருந்து 28% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

மாநில அரசே நுழைவுத் தேர்வு நடத்த பரிந்துரை?: தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளதாக நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவித்திருக்கிறது. நுழைவுத் தேர்வு நடத்தியாக வேண்டும் என்றால், மாநில அரசே தேர்வு நடத்தலாம் என பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

4 மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க திட்டம்: மேகதாது அணை விவகாரத்தில் இழுபறி நீடிக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா உட்பட 4 மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை நடத்த மத்திய நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.


Advertisement

மேகதாது - அனைத்துக்கட்சி குழு நாளை டெல்லி பயணம்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சிக் குழு நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறது. அனைத்துக் கட்சி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அணை கட்ட அனுமதிக்கக்கூடாதென பிரதிநிதிகள் நேரில் வலியுறுத்தவுள்ளனர்.

மேகதாதுவில் அணை கட்ட புதுச்சேரி எதிர்ப்பு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அணை கட்டுவதை தடுக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுத முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுத்திருக்கிறது.

ஓரிரு நாளில் பிளஸ் டூ மதிப்பெண்: தமிழகத்தில் ஓரிரு நாளில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Advertisement

நீட் தேர்வு- வாக்குறுதியை காப்பாற்றுக: தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று கூறிய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

எல்லையில் சீன அத்துமீறல் இல்லை - ராணுவம்: லடாக் எல்லையில் சீனப் படைகள் அத்துமீறவில்லை என இந்திய ராணுவம் விளக்கமளித்திருக்கிறது. அத்துமீறலால் இந்தியப்படைகள் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வறுமை ஒழியவில்லை - நீதிமன்றம் வேதனை: நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் வறுமை ஒழியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்திருக்கிறது.

கோவை, நீலகிரியில் தொடரும் கனமழை: கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடருகிறது. வால்பாறையில் பலத்த மழை காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குளத்தில் மூழ்கி சிறுமிகள் உட்பட 5 பேர் பலி: திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி சிறுமிகள் உட்பட 5 பெண்கள் உயிரிழந்தனர். குளத்தில் விழுந்த ஒருவரை மீட்க சென்றபோது அடுத்தடுத்து நால்வரும் மூழ்கியிருக்கின்றனர்.

டெட் சான்றிதழ் வழங்காமல் தாமதம் ஏன்?: ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்ற சான்றை வழங்காமல் தாமதிப்பது ஏன் என்றும், இதனால் பள்ளிகளில் பணிக்கு சேர முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுவதாகவும் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கொங்குநாடு எதற்கு? - வடிவேலு அதிரடி: நல்லா இருக்கும் தமிழ்நாட்டை ஏன் பிரிக்கவேண்டும் என கொங்குநாடு விவகாரம் குறித்த கேள்விக்கு நடிகர் வடிவேலு பதிலளித்திருக்கிறார்.

3ஆம் அலைக்கு கட்சிகள் காரணமாகக் கூடாது: கொரோனா மூன்றாம் அலைக்கு அரசியல் கட்சியினர் காரணமாகி விடக் கூடாது என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தி இருக்கிறார்.

பள்ளிகள் திறப்பு? - 16ஆம் தேதி ஆலோசனை: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கருத்தை கேட்டறிகிறார் பள்ளிக்கல்வித்துறை செயலாளர்.

கட்டப்பஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை - டிஜிபி: கட்டப்பஞ்சாயத்து செய்வோர், கந்துவட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மண்டல காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close