ரஷ்யா: மேயர் உட்பட 28 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்

ரஷ்யா: மேயர் உட்பட 28 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்
ரஷ்யா: மேயர் உட்பட 28 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்காவில் 28 பேர் பயணித்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்த நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Antonov An-26 ரக விமானம் பெட்ரோபாவ்லோஸ்க்-காம்சாக்‌ஷை (Petropavlovsk-Kamchatsky) முதல் பளானா (Palana) வரை பயணிகளுடன் பயணித்துள்ளது. கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த அந்த விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை ஆரம்பமானது.

இந்நிலையில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. 22 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என 28 பேர் இதில் பயணம் செய்துள்ளனர். பளானா (Palana) மேயர் ஓல்கா மொகிரேவாவும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார். இந்த விமானம் தனது தொடர்பை இழந்த போது அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியுள்ளது. அதனால் விமானத்தை தரையிறக்குவதில் ஏற்பட்ட சந்தேகம் இந்த விபத்திற்கு காரணமாகி உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக Antonov An-26 ரக விமானம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதுவரை பல விபத்துகள் இந்த ரக விமானத்தில் நடந்துள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com