[X] Close

படக்குழுவினருக்காக தடுப்பூசி முகாம் நடத்தும் நடிகர் சூர்யா

சினிமா

Actor-Surya-is-conducting-a-vaccination-camp-in-association-with-Chennai-Corporation

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடிகர் சூர்யா தடுப்பூசி முகாம் நடத்துகிறார்.


Advertisement

தன்னுடைய 2டி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளார் நடிகர் சூர்யா. இதற்கான தடுப்பூசி முகாம் வரும் 6 மற்றும் 7-ம் தேதி 2டி நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெறும் என்று 'புதிய தலைமுறை'யிடம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2டி நிறுவனம் தயாரிப்பில் தற்போது நான்கு திரைப்படங்கள் தயாராகின்றன. அத்துடன் சில படங்களுக்கான முன் தயாரிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த படங்களில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.  இதன் மூலம் 350 பேர் பயன் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close