துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த நடிகர் சோனு சூட்

துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த நடிகர் சோனு சூட்
துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த நடிகர் சோனு சூட்
சொந்தமாக துப்பாக்கி இல்லாமல் தவித்துவந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் சோனு சூட்.
ஊரடங்கு காலங்களில் சமூக வலைதளங்கள் வழியாக பலருக்கும் பல உதவிகளைச் செய்து, ரியல் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் நடிகர் சோனு சூட். தவிர, தான் நடத்திவரும் அறக்கட்டளை மூலமாகவும் ஏழைகள், மாணவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்ட பலருக்கும் அவர் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
இச்சூழலில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொனிகா லயக் என்ற வீராங்கனை, மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் தங்கப்பதக்கம் வென்றிருந்தும் சொந்தமாக துப்பாக்கி இல்லாமல் இருந்து வந்துள்ளார். துப்பாக்கி விலை ரூ.3 லட்சம் என்பதால் அதனை வாங்குமளவுக்கு வசதி இல்லாததால் தனது பயிற்சியாளரிடமிருந்தோ அல்லது தனது நண்பர்களிடமிருந்தோ துப்பாக்கி பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு கொனிகா லயக், ட்விட்டர் பதிவு மூலமாக சோனு சூட்டின் ஐடி உள்ளிட்ட மத்திய அமைச்சகங்களின் ஐடியை டேக் செய்து தனக்கு துப்பாக்கி வாங்கித் தந்து உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். கொனிகா லயக்கின் பதிவுக்கு பதிலளித்த சோனு சூட், துப்பாக்கி வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில், தான் வாக்கு அளித்தபடியே கொனிகா லயக்குக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்துள்ளார் சோனு சூட். இதுதொடர்பாக சோனு சூட்டிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்த கொனிகா லயக், ''ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்கப் பதக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு இப்போது பிரார்த்தனை தேவை'' என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com