[X] Close

பேச்சுவார்த்தையின் பலனாக சிமெண்ட் விலை மூட்டைக்கு 30 ரூபாய் குறைப்பு - தங்கம் தென்னரசு

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக சிமெண்ட் விலை மூட்டைக்கு 30 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


Advertisement

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் “தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு “கட்டுமான பொருட்களின் விலை கடந்த ஆட்சியிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 420 ரூபாயாக இருந்த சிமெண்ட் விலை 490 ரூபாயாக அதிகரித்தது. அதனால் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக உடனடியாக சிமெண்ட், கம்பி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அதன் மூலம் சிமெண்ட் விலை மூட்டைக்கு 30 ரூபாய் குறைந்து 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close