[X] Close

விரைவுச் செய்திகள்: உள்ளாட்சி தேர்தல் | வெளிநாடு செல்வோருக்கு தடுப்பூசி

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Tamilnadu--India--World-news-till-2-PM

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்: கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கல்வி டி.வி பாட விவரம் -மாணவர்களுக்கு தெரியப்படுத்துக: கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.


Advertisement

மறைந்த பிரபலங்களுக்கு பேரவையில் இரங்கல்: மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய பிரபலங்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கடன் இலக்கை அதிகரிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மணிகண்டன் ஜாமீன் மனு-போலீஸ் பதிலளிக்க உத்தரவு: நடிகை அளித்த பாலியல் புகாரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தது குறித்து வரும் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்கு: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்துள்ள பெண் வெளிநாட்டில் இருப்பதால் வீடியோ மூலமாக வாக்குமூலம் பெற சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.


Advertisement

கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை கடத்திய தம்பதியை காவல்துறை கைது செய்தது.

கைதிகளை காண பணம்தரும் காட்சி: திருவள்ளூரில் கிளைச்சிறையில் கைதிகளைக் காண பார்வையாளர்கள் பணம் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பணம் தரும் காட்சிகள் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலர்களை மிரட்டிய வழக்கறிஞர்: சென்னையில் மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்று காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

வெளிநாடு செல்வோருக்கு தடுப்பூசி: மதுரையில் வெளி நாடு செல்வோருக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள பிரதேயேக மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணிக்கு செல்வோர், கல்வி பயல செல்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஜெயராஜ், பென்னிக்ஸ்-க்கு அஞ்சலி: காவல்நிலையத்தில் ஜெயராஜ் , பென்னிக்ஸ் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று செல்போன் கடை வாசலில் இருவரின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஏடிஎம்-ல் வடமாநில கும்பல் கைவரிசை?: சென்னை வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரூ.2 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்: திருச்செந்தூர் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

பெண்களின் ஆடைகள் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு: பெண்களின் அரைகுறை ஆடைகளே பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சர்ச்சைப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

60 ஆண்டுகளுக்கு பிறகு ஓர் சாதனை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் 60 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்ரிக்க வீரர் கேசவ் மகராஜ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.


Advertisement

Advertisement
[X] Close