[X] Close

தென்மேற்கு பருவக் காற்று - அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு

Southwest-monsoon-Tamil-Nadu-s-Nilgiris-and-Coimbatore-may-receive-showers-in-the-next-24-hours

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 22 சென்டிமீட்டரும், அவலாஞ்சியில் 13 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close