ஆன்லைன் வகுப்புகளுக்காக உருவாக்கப்பட்ட கென்சில் செயலி: சென்னை இளைஞர்களின் புதிய முயற்சி

ஆன்லைன் வகுப்புகளுக்காக உருவாக்கப்பட்ட கென்சில் செயலி: சென்னை இளைஞர்களின் புதிய முயற்சி
ஆன்லைன் வகுப்புகளுக்காக உருவாக்கப்பட்ட கென்சில் செயலி: சென்னை இளைஞர்களின் புதிய முயற்சி

கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் இன்றியமையாத ஒன்றாகி விட்ட நிலையில், ஆன்லைன் வகுப்புகளை முழுவதும் பதிவு செய்யும் வகையிலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், சென்னையை சேர்ந்த இளைஞர்கள் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றால் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுகின்றன. இவ்வாறு ஆன்லைன் வகுப்புகள் நடக்கும்போது சில அத்துமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆன்லைன் வகுப்புகளை கண்காணிப்பதற்கும், நெறிமுறைபடுத்துவதற்கும் கின்சில் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் செயலிகள் அனைத்தும் அலுவலக கூட்டங்களுக்காக உருவாக்கப்பட்டவை என்பதால் முழுக்க முழுக்க இந்திய கல்வி முறையை அடிப்படையாக கொண்டு இந்த செயலியை வடிவமைத்துள்ளனர். நேர அட்டவணை, வீட்டுப் பாடம் பதிவேற்றும் வசதி, ஆன் லைன் தேர்வுகள், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவது, பள்ளிக் கட்டணம் செலுத்துவது என அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளை முழுமையாக வீடியோ பதிவு செய்யும் இந்த செயலி, அதனை கிளவுடில் சேமித்து வைக்கிறது. அதே போல வகுப்பு தொடங்கும் முன், பெற்றோருக்கு பள்ளியில் இருந்து ஓ.டி.பி வரும், அதை சொடுக்கினால் தான் மாணவர்களால் வகுப்பில் இணைய முடியும். மேலும் மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ யாருடைய தொலைபேசி எண்ணும் தெரியாது என்பது மற்றொரு சிறப்பம்சம்.

8 பேர் கொண்ட குழு உருவாக்கிய இந்த செயலி தற்போதைக்கு சென்னை, வேலூரில் உள்ள 35 பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சில அப்டேட்களுடன் அரசு பள்ளிகளுக்கும், இந்த செயலியை கொண்டு சேர்க்க கென்சில் இளைஞர்கள் குழு திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com