[X] Close

பாலியல் விவகாரத்தில் சிக்கிய பாடகர் வேடன் பதிவுக்கு 'லைக்': மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி

சினிமா

Parvathy-Thiruvothu-apologises-for-liking-Vedan-s-post

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட மலையாள ராப் பாடகர் வேடனின் பதிவுக்கு 'லைக்'கிட்டு விமர்சனத்தில் சிக்கிய நடிகை பார்வதி மன்னிப்புக் கோரியுள்ளார்.


Advertisement

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விவகாரத்தில் நடிகை பார்வதி மன்னிப்பு கேட்டுள்ளார். மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ள இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விரிவாக பார்ப்போம்!

சாதி அமைப்பு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான பாடல்களால் பிரபலமான மலையாள ராப் பாடகர் வேடன். ஹிரன் தாஸ் முரளி என்னும் உண்மையான பெயர் கொண்ட வேடன் அங்கு பிரபலமாக அறியப்படும் ஒரு பாடகர். வேடன் மீது சில தினங்கள் முன்பு பெண்கள் குழு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தியன. 'பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண்கள்' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவில், ஒரு சில பெண்கள், ராப் பாடகர் வேடனால் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதை பகிர்ந்து கொண்டனர்.


Advertisement

image

பத்து நாட்களுக்கு முன்பாக பகிர்ந்துகொண்ட இந்தக் குற்றச்சாட்டை முதலில் மறுத்த வேடன், `விரைவில் ‘உண்மையை’ வெளிப்படுத்துவதாக' வலைதளங்களில் பதிவிட்டார். இந்நிலையில், இரண்டு தினங்கள் முன் இந்தப் பதிவை நீக்கிவிட்டு திடீர் திருப்பமாக தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட வேடன், ஒரு நீண்ட நெடிய மன்னிப்புப் பதிவை தனது வலைப்பக்கங்களில் பகிர்ந்துகொண்டார்.

அதில், "எனது தவறான செயல்களைச் சரிசெய்ய இதை நான் மிகவும் நேர்மையுடன் இடுகிறேன். உங்களிடமும், என் பெண் நண்பர்களிடமும், நம்பிக்கையுடனும் நட்புடனும் என்னிடம் பழகி வந்த கூட்டாளர்களுடனான எனது நடத்தையில் ஏற்பட்ட குறைபாடுகளை நான் திரும்பிப் பார்க்கும்போது வருத்தமும், மிகுந்த சுய அவமதிப்பையும் நான் உணர்கிறேன். இந்த வலியை உணர நான் முற்றிலும் தகுதியானவன்.


Advertisement

image

எனது செயல்கள் உங்களுக்கு ஏற்படுத்திய வேதனையை இந்தப் பதிவு எந்த வகையிலும் தீர்க்காது என்பது என்னை மிகவும் பாதிக்கிறது. இந்த பிரச்னையில் அடுத்தடுத்த பதிவுகளால் நான் உங்களை மேலும் காயப்படுத்திவிட்டேன். உங்கள் எல்லா விமர்சனங்களையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு நேர்மையுடனும், ஒரு பாசாங்கு இல்லாமல் மனமார்ந்த மன்னிப்பு கோருகிறேன். எந்தவொரு நபருக்கும் இதுபோன்ற வலி மற்றும் அசவுகரியம் தரக்கூடிய விஷயங்களை இனி செய்யமாட்டேன் என்பதை உறுதியளிக்கிறேன். இந்த நேர்மறையான மாற்றத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்தையும் செய்வேன்" என்பது போன்ற பெரிய பதிவை இட்டிருந்தார்.

வேடனின் இந்த மன்னிப்புப் பதிவு கேரள நெட்டிசன்கள் மத்தியில் வைரலானது. அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்போ, ``வேடன் மன்னிப்புக் கேட்கும் விதம் சரியாக இல்லை. தான் செய்த தவறுகளை அவர் முழுவதுமாக ஒப்புக்கொள்ளவில்லை. இந்த ஒரு வருட காலமாக வேடன் மீது பெண்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களில் ஒருவரைக்கூட வேடன் நேரில் சந்தித்தோ அல்லது அழைத்து பேசியோ மன்னிப்பு கேட்கவில்லை. பொதுவெளியில் வந்தபின் பெயருக்கு மன்னிப்பு கேட்பது போல் கேட்டுள்ளார்" என்று கடுமையாக விமர்சித்து வந்தனர்.

image

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் மலையாள நடிகை பார்வதி திருவோத்து, வேடன் இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டிருந்த மன்னிப்புப் பதிவுக்கு 'லைக்' செய்தததால் விமர்சனத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. இதையடுத்து அந்த லைக்கை விலக்கிக்கொண்ட பார்வதி ஒரு மன்னிப்புப் பதிவை வெளியிட்டுள்ளார்.

தனது பதிவில், பார்வதி "குற்றம்சாட்டப்பட்ட பாடகர் வேடனுக்கு எதிராக மிகவும் தைரியமாக பேசிய பாதிக்கப்பட்ட பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்கள் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்ள மறுக்கும் வேளையில் வேடன் மன்னிப்பு கேட்க, அந்தப் பதிவை லைக் செய்திருந்தேன். அந்த மன்னிப்பு இது கொண்டாட வேண்டிய ஒன்றல்ல என்பதை நான் தெளிவாக அறிவேன்.

வேடன் விவகாரத்தின் அடுத்தடுத்த கட்டங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதைக் கிடைக்க வேண்டியது அவசியம் என்பதை நான் நம்புகிறேன். பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் வேடனின் இந்த மன்னிப்புப் பதிவு சரியாக இல்லை என்று எண்ணுவதாக அறிந்தேன். இதையடுத்துதான் அந்தப் பதிவுக்கு நான் இட்டிருந்த எனது லைக்கை நீக்கிவிட்டேன். என் தவறை உணர்ந்து திருத்திக் கொண்டுவிட்டேன்.

image

வேடனை மன்னிப்பதும், அவர் கொடுத்த பாதிப்பிலிருந்து மீள நினைப்பதும் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமை. ஆனால், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன்தான் நான் எப்போதும் நிற்பேன். என் செயல் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பார்வதி கூறியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close