[X] Close

2021ல் வெளியான மக்களை கவர்ந்த இந்திய படங்கள், வெப்சீரிஸ் பட்டியல் - முதலிடத்தில் “மாஸ்டர்”

சினிமா

-Master--tops-list-of-popular-Indian-films-released-in-2021

IMDB  வெளியிட்டுள்ள 2021ல் ஆன்லைனில் வெளியான பிரபல இந்திய படங்கள் பட்டியலில் விஜய் நடித்த “மாஸ்டர்” முதல் இடத்தையும், தனுஷ் நடித்த “ கர்ணன்” 6 வது இடத்தையும் பிடித்திருக்கிறது.


Advertisement

ஜனவரி 1 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை ஓடிடி யில் வெளியான முதல் பத்து படங்கள் மற்றும் வெப்சீரிஸ் பட்டியலை IMDB வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமேசான் பிரைமில் வெளியான விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படம் முதல் இடத்தையும், 2வது இடத்தை “ அஸ்பிரன்ட்ஸ்” என்ற வெப்சீரிஸும் பிடித்துள்ளது. 3 வது இடத்தை “தி ஒயிட் டைகர்” வெப்சீரிஸ் பிடித்திருக்கிறது, 4 வது இடத்தை அமேசான் பிரைமில் வெளியான மலையாள படமான மோகன்லால் நடித்த “திரிஸ்யம்-2” பிடித்துள்ளது.

5 வது இடத்தை ”நவம்பர் ஸ்டோரி” வெப்சீரிஸும், அமேசான் பிரைமில் வெளியான தனுஷ் நடித்த “ கர்ணன்” படம் 6 வது இடத்தையும் பிடித்திருக்கிறது, அமேசான் பிரைமில் வெளியான பவன்கல்யான் நடித்த தெலுங்குப்படமான “ வக்கீல் சாப்” 7வது இடத்தை பிடித்திருக்கிறது. 8 வது இடத்தை ”மகாராணி” படமும், 9 வது இடத்தை “ க்ராக் “ வெப்சீஸும், 10 வது இடத்தை “ தி கிரேட் இந்தியன் கிச்சன்” வெப்சீஸும் பிடித்திருக்கிறது.


Advertisement

 

 


Advertisement

Advertisement
[X] Close