[X] Close

"போலீசாரை அச்சுறுத்தும் விவகாரங்களில் மென்மையாக இருக்க முடியாது" - உயர் நீதிமன்றக் கிளை

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

The-Madurai-bench-of-the-Madras-High-Court-has-warned-that-the-court-will-not-be-lenient-in-matters-that-threaten-the-police-while-they-are-on-duty-during-the-COVID19-Lockdown

கொரோனா பெருந்தொற்று காலத்தில், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் மென்மையாக இருக்காது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.


Advertisement

கடந்த மே 28ஆம் தேதி திருச்சி போர்ட் ஸ்டேசன் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முகக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர்களை நிறுத்தி கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் காவல்துறையினரை கீழே தள்ளிவிட்டதோடு, தாக்க முயன்றுள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2 பேர் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி திருச்சியைச் சேர்ந்த காஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையினர் ஏற்கனவே அதிக அளவிலான மன அழுத்தத்துடன் இந்த கொரோனா நோய் தொற்று காலத்தில் பணி செய்து வருகின்றனர் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் பலரது ஈடில்லா உயிர்களை எடுத்துச் செல்லும் சூழலில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். முழுமையான ஊரடங்கு காலத்தில் யார்? எங்கே செல்கிறார்கள்? என்பது குறித்து காவல்துறையினர் கேள்வி எழுப்புகையில் தொடர்புடைய நபர் அவர்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். காவல்துறையை அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதை ஏற்க இயலாது என தெரிவித்த நீதிபதி, நோய் தொற்று சூழ்நிலையில், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்கள் அச்சுறுத்துப்படும் விவகாரங்களில் இந்த நீதிமன்றம் மென்மையாக இருக்கப்போவதில்லை, என எச்சரித்தார். இந்த வழக்கைப் பொருத்தவரை மனுதாரர் காவல்துறையினரிடம் நடந்துகொண்ட விதத்திற்கு மன்னிப்பு கோரி, இனிமேல் இதுபோன்று நடக்காது என உறுதியளித்து, நீதிமன்ற பதிவாளரிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement
[X] Close