[X] Close

குழந்தைகளை கொரோனாவில் இருந்து காக்க உதவும் தடுப்பூசிகள் எவை? - ஒரு பார்வை

இந்தியா,சிறப்புக் களம்,கொரோனா வைரஸ்

These-Covid-Shots-Will-Protect-our-Children

உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி பற்றிய விவரங்களை இங்கே தெரிந்துக்கொள்ளலாம். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா ஸ்வாமிநாதனும், தற்போது விற்பனையிலிருக்கும் கொரோனா தடுப்பூசி குறித்து பேசியிருக்கிறார்.


Advertisement

“கொரோனா அடுத்த அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என சொல்லப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். அது விரைவில் நடக்குமென்றாலும், இந்த வருடம் அது நடக்குமா என்பது கேள்விக்குட்பட்டு இருக்கிறது. குழந்தைகளை நோய்க்கு எதிராக மாற்ற, ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரிய அளவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். சமூகப்பரவல் குறைவாகும்போது, பள்ளிகளை திறக்கலாம். அப்படி திறக்கும்போது, ஆசிரியர்களும் பெற்றோரும் தடுப்பூசி போட்டிருந்தால், மூன்றாவது அலையை கையாள்வதில் சிக்கல் இருக்காது” எனக்கூறியுள்ளார்.

imageimage


Advertisement

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் 12 – 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர், பயோ என்டெக் தடுப்பூசிகள் போட அனுமதி தரப்பட்டு, பல இடங்களில் தரப்பட்டும் வருகின்றனர். அமெரிக்காவில், இவற்றோடு மாடர்னா தடுப்பூசியும் குழந்தைகளுக்கு தரப்படுகிறது. அங்கு, டீனேஜருக்கு மட்டுமன்றி, 16 வயதுக்குட்பட்ட டீனேஜர் அனைவருக்கும் தரப்படவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசியும், குழந்தைகளுக்கான தங்கள் தடுப்பூசி ஆய்வுகளை தொடங்கியுள்ளன. அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசி ஆய்வு, 6 முதல் 17 வயது வரையிலான அனைவருக்கும் மத்தியில் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, இந்த தடுப்பூசி ஏற்கெனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தரப்பட்டு வருகின்றது.

இதுவொருபுறம் இருக்க, குழந்தைகளுக்கான தடுப்பூசியில் நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று நிதி ஆயோக்கை சேர்ந்த மருத்துவர் பௌல் கூறியுள்ளார். அவர் பேசுகையில், “இப்போதைக்கு பைசர் மட்டுமே இங்கு குழந்தைகளுக்கு தரப்பட தயாராக உள்ளது. இருப்பினும் அவற்றின்மீது கூடுதல் கவனம் தரப்பட்டு, மேற்கட்ட ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்” எனக்கூறியுள்ளார்.

கூடிய விரைவில் இந்தியாவிலும் இந்தத் தடுப்பூசி விநியோகத்துக்கு வர வேண்டுமென்பதே பலரின் வேண்டுகோளாகவும் இருக்கிறது.


Advertisement

உலகளவில், குழந்தைகளுக்கு தரப்பட தயாராகிவரும் தடுப்பூசிகள்:

  • கோவேக்சின்: இந்தியாவில் உற்பத்தியாகும் இந்த தடுப்பூசியின் ஆயுவ்கள், பாரத் பயோடெக் நிறுவனத்தில் செய்யப்படுகிறது. தற்போது 2 – 18 வயதுக்குட்ப்பட்டோர் மத்தியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் 2 / 3 ம் கட்ட க்ளினிக்கல் ஆய்வுக்காக, இந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தரப்பட்டுள்ளது.
  • சைடஸ் கேடிலா தடுப்பூசி: இந்த தடுப்பூசிக்கான ஆய்வுகள், அகமதாபாத்தில் 12 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் நடந்து வருகிறது. அடுத்த 2 வாரஙக்ளில், இவற்றுக்கு அரசு ஒப்புதல் அளிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

imageimage

  • பைசர்: இதற்கு, முன்காப்பீடு வழங்கப்பட இருக்கிறது. அது கிடைத்தவுடன், இந்தியாவில் நடைமுறைக்கு வரும். எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் கல்ரியா கூறுகையில், “இந்த தடுப்பூசி, பெரியவர்களுக்கும் போடப்படுகிறது. குழந்தைகளுக்கு போடப்படும்போது, அவர்களுக்கு கிடைக்கும் தடுப்பு சக்தியின் மூலம் பெரியவர்களும் பயன்பெற வேண்டும்” என்று கூறியிருந்தார்.
  • ஸ்புட்னிக் வி: இவை,பெரியவர்களுக்கே வரும் ஜூன் இறுதியில்தான் இந்தியாவில் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிக்கான ஆய்வுகள் முடிவடைந்திருந்தாலும், அதை இந்தியா கொள்முதல் செய்வதாக இன்னமும் ஒப்பந்தம் போடப்படவில்லை.
  • மாடர்னா: இது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறந்ததென நிரூபணமாகியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

தகவல் உறுதுணை: News18


Advertisement

Advertisement
[X] Close