[X] Close

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழ்நாடு

today-rain-in-tamilnadu-districts

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், தற்போது பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்தது. காடையாம்பட்டி, தாரமங்கலம் என 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்த மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

image


Advertisement

தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. சின்னாங்குப்பம், தென்கரைகோட்டை, கவுண்டம்பட்டி, தீர்த்தமலை போன்ற இடங்களில் மழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகள் எங்கும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சிவகங்கை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காஞ்சிரங்கால், வாணியங்குடி, மதகுபட்டி கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பொழிந்தது.

நெல்லை டவுண், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, ரெட்டியார்பட்டி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதே போன்று, விருதுநகர், புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது.


Advertisement

Advertisement
[X] Close