[X] Close

”உங்கள் ஆசீர்வாதம் என்மேல் பொழிந்து கொண்டே இருக்கும். மிஸ் யூ அப்பா” -குஷ்பு

சினிமா,தமிழ்நாடு

actress-Khushboo-wishes-Karunanidhi-s-birthday

”நீங்கள் என்னுடைய சிறந்த ஆசிரியர். நிச்சயம் உங்கள் ஆசீர்வாதம் என்மேல் பொழிந்து கொண்டே இருக்கும்” என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளுக்கு நடிகை குஷ்பு உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement

 மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுக்க திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால், பல துறையினரும் அவரது நினைவலைகளை பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், திமுகவில் அரசியல் பயணத்தை ஆரம்பித்து, காங்கிரஸ் கட்சிக்கு சென்று, தற்போது பாஜகவின் இணைந்திருக்கும் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ”உங்கள் இடம் இன்னும் வெற்றிடமாய் இருப்பதை  நான் ஒருநாள் கூட நினைக்காமல் இருந்ததில்லை. நீங்கள் என்னோட சிறந்த ஆசிரியர். நிச்சயம் உங்கள் ஆசீர்வாதம் என்மேல் பொழிந்து கொண்டே இருக்கும். மிஸ் யூ அப்பா” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close