[X] Close

முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே... பிரதமர் மோடி எங்கே? - ஜோதிமணி கேள்வி

தமிழ்நாடு

Jothimani-Sennimalai-Question-Chief-Minister-MK-Stalin-is-here-Where-is-Prime-Minister-Modi

இந்த நெருக்கடியான தொற்று காலத்தில் GobackStalin என்று ட்ரெண்ட் செய்யும் பாஜகவினரே  இதோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே. பிரதமர் மோடி எங்கே? என்று கேள்வியெழுப்பியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி. 


Advertisement

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.


Advertisement

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்களை பகிர்ந்து, ''இந்த நெருக்கடியான கொரோனா தொற்று காலத்தில் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் GobackStalin என்று ட்ரெண்ட் செய்யும் பிஜேபியினரே இதோ தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் இங்கே. பிரதமர் திரு. நரேந்திர மோடி எங்கே? என்று பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close