மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் கொரோனாவால் உயிரிழப்பு

மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் கொரோனாவால் உயிரிழப்பு
மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் கொரோனாவால் உயிரிழப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் காலமானார். அவருக்கு வயது 81.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் கொரோனாவால் சென்னையில் உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராக இருந்த மைதிலி சிவராமன், வாச்சாத்தி வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி உண்மைகளை ஆவணப்படுத்தியவர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்புகள்:

1939-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த மைதிலி, பட்டமேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அப்போது அமெரிக்கா - வியட்நாம் யுத்தம் உச்சத்தில் இருந்தது, மேலும் கியூபாவின் கம்யூனிஸ்ட் முற்போக்கு அரசு அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, அப்போதிலிருந்து தன்னை கம்யூனிச சித்தாந்தத்தில் இணைத்து கொண்டார்.

1966 முதல் 1968 வரை ஐ.நா. மன்றத்தின் உதவி ஆராய்ச்சியாளராக இருந்தார். மைதிலி பட்டப்படிப்பு முடித்து இந்தியா திரும்பிய காலகட்டத்தில், கீழ்வெண்மணி படுகொலை சம்பவம் அவரை உலுக்கியது. நேரடியாக கீழ்வெண்மணிக்கு சென்று அங்கு நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து ஆவணப்படுத்தி ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதினார். அவர் கீழ்வெண்மணி பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

பின்னர் இடதுசாரி இயக்கத்தின் ஈர்ப்பால் இந்தியா திரும்பினார். பேராசிரியராக பணி செய்த அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் தமிழக மாநில குழு உறுப்பினராக இருந்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவராக, அந்த சங்கம் தொடங்குவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com