[X] Close

விளையாட்டு பொருட்கள் வாங்க வைத்திருந்த 1000 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்த சிறுவன்

தமிழ்நாடு

The-boy-who-donated-1000-rupees-to-the-Chief-Minister-s-Relief-Fund-in-pudukkottai

புதுக்கோட்டையைச் சேர்ந்த 2 ஆம் வகுப்பு மாணவன் தான் விளையாட்டு பொருட்கள் வாங்க சேமித்து வைத்த 1000 ரூபாயை, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

புதுக்கோட்டை மச்சுவாடி என்ஜிஓ காலனி பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவரது மகன் மெல்வின் ஜெபா. அங்குள்ள தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு வரும் ஜெபா, விளையாட்டுப்பொருட்கள் வாங்க சேமித்து வைத்திருந்த 1000 ரூபாயை, நரிமேட்டில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை ஆய்வு செய்த புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ டாக்டர் முத்துராஜாவிடம் தனது தந்தையுடன் வந்து வழங்கினான். 

image


Advertisement

இதை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட திமுக எம்எல்ஏ முத்துராஜா, “அந்த சிறுவனுக்கு தேவையான விளையாட்டுப் பொருட்களை தானே வாங்கி கொடுப்பதாக கூறி, முதல்வர் சார்பில் ஒரு திருக்குறள் புத்தகம் அளிக்கப்படும்” என்று வாக்குறுதியளித்தார்.

இதுகுறித்து அந்த சிறுவன் கூறும் போது, “ நான் விளையாட்டு பொருட்கள் வாங்குவதற்காக, சிறுக சிறுக 1000 ரூபாயை சேமித்து வைத்திருந்தேன். முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்கலாம் என முதல்வர் அறிவித்த நிலையில், அதனை பார்த்து என்னால் இயன்ற உதவியை செய்யும் வகையில் இந்த ரூபாயை வழங்கியிருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.” என்றான்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close