[X] Close

மதுரை: சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு - தடுப்பூசிப் போட சென்ற போது நிகழ்ந்த சோகம்

தமிழ்நாடு

Vaccinated-youth-dies-in-road-accident-Tragedy-in-Madurai

திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கொரோனா தடுப்புசி போடச்சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Advertisement

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் ஹரிஹர சுரேந்தர் (22). இவர் வாடிப்பட்டியில் உள்ள நான்கு சக்கர வாகன உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்,

image


Advertisement

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிலையில் இன்று கப்பலூர் தொழிற்பேட்டையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி மையம் அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதையடுத்து தடுப்பூசி போடுவதற்காக வாடிப்பட்டியில் இருந்து கப்பலூர் தொழிற்பேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் ஹரிஹர சுரேந்தர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் ஹரிஹர சுரேந்தர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

image


Advertisement

தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close