[X] Close

விழுப்புரம்: மீன் பிடிப்பதற்காக ஏரிக்கரையை உடைத்த மர்ம நபர்கள்; வீணாகும் தண்ணீர்

தமிழ்நாடு

Persons-damaging-the-shores-of-the-lake-for-fishing-near-Villupuram

விழுப்புரம் அருகே மீன் பிடிப்பதற்காக ஏரியின் கரையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

விழுப்புரம் அருகே உள்ளது பொய்யபாக்கம் கிராமம். இங்கு சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பாசனத்திற்காக பொதுப்பணித்துறை ஏரி ஒன்று அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஏரியில் ஓரளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்று வந்தது. மேலும் பொதுப்பணித்துறை சார்பில் ஏரியில் மீன் வளர்க்கவும் விற்பனை செய்யவும் குத்தகை விடப்பட்டது.

image


Advertisement

இந்த நிலையில் மீன் பிடிப்பதற்கு தண்ணீர் அதிக அளவு இருப்பதால், ஒரு பகுதியில் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்படுத்தி சில நபர்கள் தண்ணீரை வீணாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் வீணாக வெளியேறும் நீரை உனடடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இல்லையென்றால் தற்போது பயிரிட்டிருக்கும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் போகும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close