[X] Close

திருச்செந்தூர்: கடலில் விஷத்தன்மை உள்ள ஜெல்லி மீன்கள்; எச்சரிக்கைப் பலகை வைக்க கோரிக்கை!

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் விஷத்தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள் தென்பட்டுள்ள நிலையில் அது குறித்து எச்சரிக்கை பலகை வைக்க அரசை மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Advertisement

விஷத்தன்மை கொண்ட இம்மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் கையால் தொட வாய்ப்புள்ளதாகவும் எனவே இது குறித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கேட்டு்க் கொண்டுள்ளனர். முன்னதாக முத்துலிங்கம் என்ற மீனவர் விரித்த வலையில் சிக்கிய இந்த ஜெல்லி மீன் அவரது கையில் ஒட்டிக்கொண்டது.

இதில் அவரது கையில் அரிப்பு ஏற்பட்டு பின்னர் தடிப்பு ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றார். இதையடுத்து அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாஸ் புயல் காரணமாக கடற்கரை பகுதிக்கு இவ்வகை மீன்கள் வந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close