[X] Close

கோவையில் தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் செய்யப்படுவதாக புகார்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Complaint-of-delay-in-vaccination-in-Coimbatore

கோவையில் தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


Advertisement

கோவை மாவட்டத்திற்கென நான்கு தினங்களுக்கு முன்னர் 44 ஆயிரம் கோவிஷீல்டு , 7 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் இருப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.  தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரங்கள் மற்றும் இருப்பு விபரங்கள் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அவை தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகள் செலுத்துவதில் அரசு தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் கிடைக்கப்பெறவில்லை என சுகாதாரத்துறையில் சிலர் தெரிவிக்கின்றனர். பொதுமக்களுக்கு எங்கு தடுப்பூசி செலுத்தப்படும் என முறையான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்க வேண்டும் என்பதே கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close