[X] Close

ராமநாதபுரம்: 15 மருத்துவர்கள், 25 செவிலியர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 15 மருத்துவர்கள், 25 செவிலியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 195 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் வெளி நோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், உள் நோயாளிகளாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 167 செவிலியர்களும், 57 மருத்துவர்களும் பணியாற்றி வரும் நிலையில், பலருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 15 மருத்துவர்கள், 25 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close