[X] Close

கொரோனாவால் மனைவி உயிரிழந்த சோகம்; கணவனும் மகனும் தற்கொலை

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Husband-and-son-commit-suicide-by-drinking-poison-in-tragedy-over-wifes-death-by-Corona

மனைவி கொரோனாவிற்கு இறந்த துக்கம் தாங்காமல் கணவனும் மகனும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திருவோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள நரங்கிப்பட்டியை சேர்ந்த மீனா தனது கணவர் மற்றும் மகனுடன் கிருஷ்ணகிரியில் வசித்து வந்த நிலையில், கடந்த மாதம் கொரோனா பாதித்து மீனா உயிரிழந்தார். இந்நிலையில் மீனாவின் கணவர் கனகராஜ் மகன் மனோஜ்குமார் ஆகிய இருவரும் தஞ்சை மாவட்டம் நரங்கிபட்டிக்கு வந்து நேற்று முன்தினம் மீனாவிற்கு 30-வது நாள் காரியம் செய்தனர்.

image


Advertisement

image

இந்நிலையில், மனவேதனையில் இருந்த கனகராஜும் மனோஜ்குமாரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான நிலையில் கணவனும் மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close