[X] Close

"மக்களை காக்க உடனடி நடவடிக்கை வேண்டும்" பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

இந்தியா

Rahul-Gandhi-writes-letter-to-PM-Modi-on-covid-virus-issue

மக்களை காக்க பிரதமர் மோடி உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தவறான தடுப்பூசி கொள்கையால், நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துவருவதாகவும் கொரோனா என்னும் சுனாமி இந்த நாட்டை இன்னும் விடாமல் சூறையாடி வருவதாகவும் அந்த கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இக்கட்டான சூழலில், மக்கள் பிரதமரான மோடியின் அதிகபட்ச கவனத்தை எதிர்பார்ப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, நாட்டு மக்கள் படும் துயரங்களை உடனடியாக தடுத்து நிறுத்த அத்தனை சக்திகளையும் அதிகாரத்தையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

image


Advertisement

இந்தியாவில் உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் முறையாக செயல்படுகிறதா என ஆய்வு செய்வதோடு, நாட்டு மக்கள் அனைவருக்கும் உடனடியாக தடுப்பூசி செலுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியுள்ளார். அரசின் கவனமின்மையால் மீண்டும் ஒரு மிகப்பெரிய பொது முடக்கத்திற்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, மக்களை காக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close