கொரோனா நெருக்கடி: ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை அறிவித்தது ஆர்பிஐ

கொரோனா நெருக்கடி: ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை அறிவித்தது ஆர்பிஐ
கொரோனா நெருக்கடி: ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை அறிவித்தது ஆர்பிஐ

கொரோனா நெருக்கடி சூழலில் நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தா தாஸ் இன்று கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதிகரித்துள்ள நிதி சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை அறிவித்தார். அப்போது, "கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கும்" என்று தெரிவித்தார். கொரோனா சூழ்நிலைகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், "இரண்டாவது அலை, முதல் அலைகளை விட ஆபத்தானது" என்றும் கூறினார்.

சிறிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கும் என்று கூறிய சக்திகாந்த தாஸ், "முதல் அலைக்குப் பிறகு பொருளாதாரம் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டது. நல்ல பருவமழை காரணமாக கிராமங்களில் தேவை அதிகரிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்த அவர், கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக போராட மருத்துவமனைகள், ஆக்சிஜன் சப்ளையர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள், கொரோனா மருந்துகள் ஆகிய மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளையும் அறிவித்தார்

மேலும், “வரையறுக்கப்பட்ட KYC யை டிசம்பர் 1, 2021 வரை பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதிக்கும். சிறு நிதி வங்கிகள்  ரூ.500 கோடி வரை சொத்து வைத்துள்ள சிறிய நுண் நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க அனுமதிக்கப்படுகின்றன.

தனிநபர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சிறு,குறு தொழில்களுக்களுக்கான கடன் தீர்மான கட்டமைப்பு அறிவிக்கப்படும். மார்ச் 30, 2021 நிலவரப்படி இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 588 பில்லியன் டாலராக இருந்தது. இது உலகளாவிய நெருக்கடியை சமாளிக்கும் நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

உலகப் பொருளாதாரத்தின் கண்ணோட்டம் மிகவும் நிச்சயமற்றது மற்றும் அபாயங்களுக்கு உட்பட்டது. ஆனால், இந்தியா இந்த நெருக்கடியிலிருந்து மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது. வழக்கமான மழைக்காலம் உணவு விலை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்” என்று பல அறிவிப்புகளையும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com