[X] Close

மயிலாடுதுறை: கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Mayiladuthurai-Corona-vaccine-shortage-Public-involved-in-road-blockade

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கொரோனா நோயின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவிவருகிறது. நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு விதமான தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தடுப்பூசிபோட்டுக் கொள்ள மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர்.

image


Advertisement

முதல்டோஸ் போட்டுக் கொண்டவர்கள் முதலில் எந்த மருந்தை போட்டுக் கொள்கிறார்களோ அதே மருந்ததைதான் 2வது முறையும் போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது கோவாக்சின் மருந்து மிகவும் தட்டுப்பாடாக இருந்து வருகிறது. கோவிஷுல்டு தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி பொட்டுக்கொள்ள வருகை தரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

image

இந்நிலையில காலை 8.30மணி முதல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிபோட்டு கொள்வதற்காக பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்துள்ளனர். காலை 11 மணிக்குமேல் நின்று கொண்டிருந்தவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி மருந்து தீர்ந்துவிட்டது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு தலைமை மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

Advertisement
[X] Close