மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹுண்டாய் i20 facelift கார் இம்மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ20 ரக கார்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக அடுத்தடுத்த மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2014 ஆம் ஆண்டு elite i20, 2020 ஆம் ஆண்டு all new i20, 2023 ஆம் ஆண்டு all new i20 facelift கார்கள் அறிமுகமாகின.
எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா (ஓ) என ஐந்து வேரியண்ட்களில் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் எரா என்பது புதிய வேரியண்ட் ஆகும். பொதுவாக ஐ20 ரக கார்கள் கொண்டுள்ள வசதிகளை விட கூடுதலான வசதிகளுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பேராமெட்ரிக் கிரில் மற்றும் புதிய டிசைனில் பம்பர் இடம்பெற்றுள்ளது. பழைய மாடல்களில் ஸ்கிட் ப்ளேட்கள் கருப்பு நிறத்தில் இருந்த நிலையில் புதிய ரக காரில் சோனிக் சில்வர் என்ற புதிய நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. LED HEADLAMP உடன் DRLS பயன்படுத்தப்பட்டுள்ளது.
காரின் உட்புறத்தைப் பொறுத்தவரை, பொதுவாக i20 ரக கார்களில் ப்ளாக் தீம்கள் பயன்படுத்தப்படும். இம்முறை BLACK உடன் Beige Finish செய்யப்பட்டுள்ளது.
தற்கால இளைஞர்கள் சன் ரூஃப் ரக கார்களையே அதிகம் விரும்புகின்றனர். அதற்கேற்றவாறு i20 facelift ரக கார்களிலும் சன் ரூஃப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்ற மாடல் கார்களில் மேனுவலாக இருந்த இந்த செயல்முறை தற்போது குரல் கொடுப்பதன் மூலம் செயல்பட வைக்க முடிகிறது.
இன்ஜினைப் பொறுத்தவரை ஐ20 ரக கார்களுக்கு பயன்படுத்தப்படும் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் கப்பா இன்ஜின். 1.2 கப்பா என்பது 88 PS பவர்.
காரின் விலையைப் பொறுத்தவரை 7 லட்சத்தில் இருந்து 12 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம்).