ஸ்கோடா இந்தியா நிறுவமானது சந்தையில் போட்டியிடும் வகையில் ரூ.7.89 லட்சத்தில் ஸ்கோடா கைலாக் சப்-4எம் SUV என்ற காரை அறிமுகப்படுத்துகிறது. குறைவான விலையில் பிரீமியம் வசதிகளுடன் சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களுடன் அனைத்து மக்களுக்குமான காராக அது சந்தையில் அறிமுகமாகிறது.
கடந்த நவம்பர் 6-ம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், முன்பதிவானது டிசம்பர் 2-ம் தேதி முதல் தொடங்கும் எனவும், விற்பனையானது 2025 ஜனவரி 27 முதல் ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா கைலாக் சப்-4எம் SUV காரை அறிமுகப்படுத்திய பிறகு பேசிய ஸ்கோடா ஆட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி கிளாஸ் ஜெல்மர், “ஸ்கோடா கைலாக் எங்கள் முதல் சப்-4m SUV ஆகும், இது இந்தியாவில் எங்கள் பிராண்டிற்கு ஒரு புதிய நுழைவு புள்ளியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்களின் சர்வதேசமயமாக்கல் திட்டங்களுக்கு இந்திய சந்தையானது மிகவும் முக்கியமானது, உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையான இங்கு புதிய விற்பனையில் 50% SUV கார்கள் பங்குவகிக்கின்றன.
பிரபலமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் இந்தப் பிரிவில் இருக்கும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் கைலாக் இந்த புதிய வெர்சன் காரை அறிமுகப்படுத்துகிறது. இது நவீன சாலிட் டிசைன் உடன் பலவிதமான மாறுபாடுகள், வண்ணங்கள், அம்சங்கள் மற்றும் 25க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் நிலையான தொகுப்பையும் வழங்குகிறது. ரூ.7,89,000 என்ற மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஆரம்ப விலையில், அனைவரும் அணுகக்கூடிய மாடலாக அறிமுகப்படுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
* புதிய கைலாக் காரில் 1-லிட்டர் TSI டர்போ பெட்ரோல் எஞ்சின் 114 bhp மற்றும் 178 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. எஞ்சின் இரண்டு டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது துடுப்பு ஷிஃப்டர்களுடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உள்ளது. ஸ்கோடாவின் கூற்றுப்படி, கைலாக் மேனுவல் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 10.5 வினாடிகளில் அடையும்.
* சிறந்த டிரைவிங் டைனமிக்ஸ் மற்றும் 446 லிட்டர் செக்மென்ட்-லீடிங் பூட்-ஸ்பேஸுடன் கூடிய வசதியான் உட்புறத்தையும் கொண்டுள்ளது. ஆறு ஏர்பேக்குகள் உட்பட, நிலையான பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.
* முகப்பில் கிரில், DRL மற்றும் முகப்பு விளக்கு செட்டப்பானது நீட்டாக அடுக்கி வைக்கப்பட்டதைப் போல இருக்கிறது. குஷாக்கில் இருப்பதை விட சற்று ஸ்லிம்மான கிரில், அந்த கிரில்லின் முடிவிலேயே இரண்டு பக்கமும் LED DRL-கள், அதற்கு கீழே சற்று இடைவெளி விட்டு ப்ரொஜெக்டார் முகப்பு விளக்குகள் இடம்பெற்றிருக்கின்றன.
* பம்பரில் அதிகப்படியான கிளாடிங் பயன்படுத்தப்பட்டிருப்பது, டூயல்-டோன் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. அதற்கு கீழே, இடம்பெற்றிருக்கும் அலுமினியம் ஸ்பாய்லர் முகப்பிற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.
*குஷாக்கை விட 85 மிமீ குறைவாக 2,566 மிமீ வீல்பேஸையும், 230 மிமீ குறைவாக 3,995 மிமீ நீளத்தையும் கொண்டிருக்கிறது கைலாக். கிரௌண்டு கிளியரன்ஸும் 189 மிமீ என்ற அளவில் போதுமான அளவு இருக்கிறது.
*பின்பக்கம் T வடிவ சிக்னேச்சருடன், சதுர வடிவில் டெயில் லேம்ப்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.