சக்கர வியூகம் 9 | ராஜபாட்டை

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் ஒன்பதாம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் 9
சக்கர வியூகம் 9 புதிய தலைமுறை
Published on

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்

சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்
சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்

அத்தியாயம் 9 - ராஜபாட்டை

இந்த தேச எல்லை பேச்சுவார்த்தைகளை அரசாங்கள் ப்ரபோஸ் செய்து, அண்டை நாட்டிற்கும், பெரியண்ணன் நாட்டிற்குமிடையே ஒரு அமைதி உடன்பாடு செய்து புதிய நாடொன்றை உருவாக்கும் முடிவு செவ்வனே தீட்டப்பட்டது. 

ஷேக்கின் பெரிய மனதை சர்வதேச ஊடகங்கள் பாராட்டிக்கொண்டிருந்தன. நினைத்ததை விட பேராதரவு அவருக்கு வளைகுடா பகுதியில் கிடைக்க ஆரம்பித்திருந்தது. சில சின்னஞ்சிறு முடிச்சுகளாய் இருந்த பிரச்னைகளும் அவருக்கு அவிழ ஆரம்பித்தன. 

தேசத்திற்குள்ளேயும் “மன்னருக்குப் பிறகான மதியூகி இவரே” என்ற புகழொலிகள் விண்ணைத்தொடுமளவுக்கு உயர்ந்தன.

ஆர்ஜே என் அரசாங்கப்பணி தொடர்பாகவும் பச்சைக்கொடி காட்டியிருந்தார். உனக்கேற்ற இடத்தை நோக்கி நீ செவ்வனே நகர்ந்து கொண்டிருக்கிறார் என்றார். 

எல்லாம் கூடிவந்த திரு நேரத்தில் நான் அந்த தேசத்தின் முதன்மை செயல் ஆலோசகராகப் பணியேற்றுக்கொண்டேன். கிட்டத்தட்ட ஷேக்கிற்கும், கேபினெட்டுக்கும் அடுத்த அதிகாரம் கொண்ட பலமிக்க அமர்வு. பொறுப்புகள் மிக மிக அதிகம். ஆயினும் என்ன... என் நாவன்மை, செயல்திறன், ஸ்வாமியின் தொடர்புகள், எங்கள் பாதையை இலகுவாக்கின. 

சக்கர வியூகம் 9
சக்கர வியூகம் 8 | தங்க ஏணி

ரெட்டிக்கு நான் அவர் கார்பரேட்டிலிருந்து விலகுவது பற்றிப்பெரிய வருத்தம், சிறிது மனக்கிலேசமும். அவரை நேரில் சென்று பார்த்து வணங்கி, இது மேலும் அரசாங்கத்துடனான அவருடைய நல்லுறவை எப்படி வளர்க்கும் என்றும், வருங்காலத்தில் இங்கு அவரே முதன்மை நிறுவனமாக வளர என்னாலான பேருதவிகளைச்செய்ய தயங்க மாட்டேனென்றும் உறுதியளித்த பிறகு சற்றே லேசானார்.

அதன்பிறகு என் பாதையில் எந்தத்தடைகளும் இருக்கவில்லை. தேசம் போய்க்கொண்டிருந்த உயரத்திற்கு ஈடு கொடுக்க, அரசாங்கம் எத்தனை வசதிகள் செய்யவேண்டுமோ, அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டே இருந்தன. சர்வதேச சமுதாயத்தின் கண் மொத்தமும் இங்கு விழ ஆரம்பித்தது.

டூரிஸம் ஜொலித்தது. டூரிஸம் ஜொலிக்க ஜொலிக்க மீதமுள்ள பாலைகளையெல்லாம் சோலைகளாக்கிக்கொண்டே போனோம். ஒரு சாதாரண நாட்டில் பயணிப்பவன் என்னென்ன சொகுசையெல்லாம் அனுபவிப்பானோ, அத்தனையையும் இங்கு வழங்குவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றினோம்

காடு வந்தது, மலைகள் வந்தன, நீர் வீழ்ச்சி வந்தது, பாலையில் எங்கு போனாலும் தீராத தண்ணீர் கேளிக்கைகளை காண்பித்துக்கொண்டே இருந்தோம். உலகின் அத்தனை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களையும் இலகுவிலைக்கு விற்பனை செய்தோம்.

எங்கள் நாட்டில் விற்கப்படும் தங்கத்திற்கு உலகத்தில் வேறெங்கும் ஈடில்லை என்று செய்தோம், கனவுகளை விதைத்து, விதைத்து அறுவடை செய்து சர்வதேசத்திற்கு ஆச்சர்யமூட்டிக்கொண்டே இருந்தோம்.

சக்கர வியூகம் 9
சக்கர வியூகம் 7 | ஷேக் அமானுல்லா

எல்லாவற்றிலும் என் சிந்தனையும் செயலும் இருந்ததால், நான் ஷேக்கின் வலதுகரமானேன். எந்நேரமும் அவரை அணுக முடிந்த ஒரே ஹோமோசேபியனாக நான் இருந்தேன். மரியாதையாகப்பேசி, மகிழ்வாகப்பேசி, சண்டை போட்டு சில உத்தரவுகளை இடச்செய்யும் அளவிற்கு அரசியல் நெருக்கம் வந்திருந்தது.

திறமையும், அதிகாரமும் இணைந்த என் ஆளுமைக்கும் நாட்டில் எங்கு போனாலும் மரியாதை கூடிக்கொண்டே இருந்தது. அத்தனையும் ஆர்ஜே ஸ்வாமி போட்ட பிச்சை என்பதை நான் இந்த நிமிடம் வரையில் மறக்கவில்லை.
சக்கர வியூகம் 9
சக்கர வியூகம் 6 | அரசாங்க அழைப்பு

அவர் ஆசீர்வதித்தந்த அந்த எலுமிச்சம்பழத்தை பல வருடங்கள் கழிந்தும் இன்றும் ஒரு கையடக்க சிறிய ஃப்ரீசர் பெட்டியில் பாதுகாப்புடன் வைத்திருக்கிறேன். அவர் ஆசீர்வதித்துத்தந்த அற்புதப்பரிசல்லவா. அந்த மந்திரம்தானே இந்த ராஜபாட்டையில் என்னை உலவவிட்டிருக்கிறது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com