Milk
MilkRepresentational Image | Freepik

உச்சி முதல் பாதம்வரை.. ஒரு கப் பால் மூலம் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா! #12BenefitsOfMilk #WorldMilkDay

நாம் அன்றாடம் குடிக்கும் பால், நம் உடலுக்கு கொடுக்கும் முக்கியமான 12 நன்மைகளை இங்கே காணலாம்!

இன்று உலக பால் தினம். நம் உடலுக்கு பால் மூலம் கிடைக்கும் எண்ணிலடங்கா நன்மைகளை எடுத்துக்கூறவும், பால் சார்ந்த பொருட்களின் பயன்களை பற்றிய விழிப்புணர்வை கொடுக்கவுமே, இத்தினம் கொண்டாடப்படுகிறது.

World Milk day
World Milk dayRepresentational Image | Freepik

இந்த நேரத்தில், பால் நம் உடலுக்கு கொடுக்கும் முக்கியமான 12 நன்மைகளை நமக்கு பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி!

ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி, MSc. CN, CDE, CCN.
ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி, MSc. CN, CDE, CCN.PT Desk

1. எலும்பு:

பாலில் உள்ள நிறைந்த கால்சியம் சத்து, எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. வாழ்நாள் முழுக்க பால் எடுத்துக்கொள்வோர், சீராக அன்றாடம் உடற்பயிற்சியும் செய்து வந்தால் எலும்பு அழற்சி, இயற்கையில் ஏற்படும் எலும்பு முறிவு போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம்.

Bone Health
Bone HealthRepresentational Image | Freepik

வைட்டமின் டி, வைட்டமின் கே, பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம், கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக பால் உள்ளது.

பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் தடுக்கலாம். குழந்தை பருவத்திலும் இளமை பருவத்திலும் கூடுதல் கால்சியம் உடலுக்கு தேவைப்படும் என்பதால், அந்த பருவத்திலிருப்போர், பாலை நிச்சயம் தினமும் குடித்துவரலாம்!

2. ஊட்டச்சத்துகள்

கால்சியம், புரதம், வைட்டமின்கள் (பி மற்றும் டி), தாதுச்சத்துகள் (பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை) பாலில் நிறைந்திருக்கும். இவை உடல் வளர்ச்சிக்கும், நன்மைக்கும் உதவும்.

Milk Nutritional benefits
Milk Nutritional benefitsRepresentational Image | Freepik

ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் முக்கியமானது புரதம். ஏனெனில் மனித உடலின் அடிப்படையே புரதம்தான். மேலும் உயிரணுக்களை உருவாக்குவதற்கும் சரிசெய்வதற்கும்கூட புரதம்தான் தேவைப்படுகிறது. இத்தகைய புரதம், அன்றாடம் குடிக்கும் ஒரு கப் பாலில் கிடைக்கும்.

காலை உணவுக்கு, பேலன்ஸ்ட் டயட்டை தேடுவோருக்கு அதிக புரத உள்ளடக்கம் கொண்ட பால், நல்ல சாய்ஸ்!

3. தசை வளர்ச்சி மற்றும் தசை பிரச்னை சரிசெய்தல்

Milk
MilkRepresentational Image | Freepik

பாலில் உள்ள புரதம், உடலுக்கு தேவையானளவு முழுமையான தரத்திலான புரதமாக சொல்லப்படுகிறது. இதனால் உடலுக்கு அமினோ அமிலம் கிடைக்கப்பெறுவதால் தசை வளர்ச்சி, தசை பிரச்னைகள் விரைந்து சரியாகுதல் போன்றவை நடக்கும். மேலும் தசைகள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

4. நீர்ச்சத்து

Milk
MilkRepresentational Image | Freepik

உடற்பயிற்சிக்குப்பின்னும் ​​உடல்நலிவுற்றபோதும் உடலில் அதிக திரவ இழப்பு ஏற்பட்டு, நீர்ச்சத்து குறைய வாய்ப்புண்டு. அப்படியான நேரத்தில், பால் குடித்தால் நீரிழப்பு கட்டுப்படும். தாகத்தைத் தணிப்பதுடன், உடலுக்கு மீண்டும் நீர்ச்சத்தை கொடுக்கும்! உடலில் கார்போஹைட்ரேட்ஸ், புரதம் போன்றவற்றை உயர்த்தி சிறந்த நீராகவும் பால் இருக்கும்.

5. நல்ல தூக்கம்

தூக்கத்தில் பிரச்னை ஏற்பட முக்கிய காரணம், மன அழுத்தம். பாலில் உள்ள அமினோ அமிலத்தில் இருக்கும் செரடோனின் என்ற நரம்பு மண்டலத்தை தூண்டும் சுரப்பி, சற்று மயக்க உணர்வை கொடுப்பதால், படுக்கைக்கு செல்லும் முன் பால் குடிப்பதால் நல்ல தூக்கத்தை பெறலாம்! பாலின் கால்சியமும் மெலடோனினை கொடுத்து, தூக்கத்துக்கு உதவும்.

Milk and sleep
Milk and sleep Representational Image | Freepik

தூக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு வகை அமினோ அமிலமான டிரிப்டோபானின் நல்ல மூலமாக பால் உள்ளது. இந்த அமினோ அமிலம் நமது உடலால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால், இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். டிரிப்டோபான், மெலடோனினை ஊக்குவிப்பதாகவும் அறியப்படுகிறது. மெலடோனின், நமது தூக்க சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, தூக்கமின்மையால் போராடுபவர்கள் படுக்கைக்கு முன் ஒரு கிளாஸ் பால் குடிக்கலாம்!

6. நினைவாற்றல் அதிகரிக்கும்

வயது முதிர்வின்போது, ஞாபக மறதி ஏற்படுவது இயல்பு. பாலில் உள்ள வைட்டமின் பி 12, ஞாபக சக்தியை தூண்டிவிடும். இதனால் அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் தவிர்க்கப்படும். ஞாபக சக்தி ஓரளவு மேம்படவும் பால் உதவும்.

Milk and health
Milk and healthRepresentational Image | Freepik

பால், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவகத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் இது புரதம், வைட்டமின் டி, பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். பால் குடிக்கையில் மூளை ஆரோக்கியமும் மேம்படும் என்பதால், Brain Boost-ஆவதற்க்கும் அன்றாடம் பால் குடித்துவரலாம்!

7. உடல் எடை

குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால், உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு பெரிதும் உதவும். இதை பேலன்ஸ்ட் டயட்டில்கூட சேர்த்துக்கொள்ளலாம். பசியை போக்கும் தன்மையும் பாலுக்கு இருப்பதால், பால் குடித்தபின் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் கலோரி நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்வது தவிர்க்கப்படும்.

Milk benefits
Milk benefitsRepresentational Image | Freepik

பால் கலோரிகள், புரதம் மற்றும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும், இது பாதுகாப்பாக எடை அதிகரிக்கவும் தசையை உருவாக்கவும் உதவும். அதற்கு அன்றாடம் உணவுடன் பால் குடிக்கலாம். அல்லது ஸ்மூத்தீஸ், சூப்கள், முட்டைகள் அல்லது சூடான தானியங்களில் பால் சேர்த்து சாப்பிடலாம்.

8. இதய நலன்

Milk
MilkRepresentational Image | Freepik

பாலில் உள்ள ஊட்டச்சத்துகளான பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்றவையெல்லாம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். இது, இறுதியில் இதய நலனை காக்க உதவும்

9. கர்ப்பிணிகளுக்கு!

Pregnancy
PregnancyRepresentational Image | Freepik

கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சி இருக்குமென்பதால், கர்ப்பிணிகளுக்கு கால்சியம் சத்து அதிகம் தேவைப்படும். அவர்களுக்கு பால் நிச்சயம் உதவும். கருவின் திசு வளர்ச்சிக்கு தேவையான புரதம், உடலிலுள்ள கால்சியத்தை சரியாக உட்கரிக்க தேவையான வைட்டமின் டி ஆகியவற்றையும் பால் கொடுக்கும்!

10. தலைமுடி வளர உதவுதல்!

Hair problems
Hair problemsRepresentational Image | Freepik

பாலில் உள்ள புரதம், கால்சியம், தாதுக்கள் யாவும் தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். அந்த வகையில், முடிக்கு தேவையான மாய்ஸ்சரைசர் மற்றும் சிறந்த கண்டிஷனர், நாம் உட்கொள்ளும் பால்தான். இது, முடி வறண்டு போவதை தடுப்பதுடன் முடி பாதிக்கப்படுவதையும் தடுக்கும்.

11. தோல் பராமரிப்பு பண்புகள் உள்ளன

பால் நம் உடலை சுத்திகரிக்கும் மற்றும் ஈரப்பதமூட்டும் பானம். இதனாலேயே பெரும்பாலான தோல் பராமரிப்பு பொருட்கள் தங்கள் தயாரிப்புகளில் பால் கலவைகளைப் பயன்படுத்துகின்றன. ஆகவே பால், சருமத்தை சுத்திகரித்து க்ளோ (Glow) செய்யும் தன்மை கொண்டது.

Milk and glowing skin
Milk and glowing skinRepresentational Image | Freepik

தோல் பராமரிப்புக்காக பெரிய பெரிய மெனக்கெடல்களை செய்வோர், வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்திவரலாம்!

12. வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது

நம் பற்களைப் பாதுகாப்பதில் கால்சியத்தின் பங்கு முதன்மையானது. அதனால்தான் பற்பசைகள்கூட கால்சியத்தை மையப்படுத்தி வருகின்றன. இருப்பினும் அவை பற்களின் வெளி ஆரோக்கியத்திற்கானது. பற்களின் ஆரோக்கியமும் மேம்பட வேண்டுமென்றால், ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் குடித்து வரவும்! (ஏனெனில் இதில்தானே கால்சியம் நிறைந்துள்ளது.)

Child
Child Representational Image | Freepik

மற்ற தாதுக்களுடன் கூடுதலாக, பாலில் கேசீன்கள் உள்ளன. அவை மற்ற ஊட்டச்சத்துக்களுடன் இணைந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்த வகையான புரதங்கள் பற்சிதைவைத் தடுக்க உதவுகின்றன.

ஒரு நாளில் எவ்வளவு பால் குடிக்கலாம்?

Milk
MilkRepresentational Image | Freepik

பெரியவர்கள் எனும்பட்சத்தில், ஒருநாளில் 1 - 2 முறை பால் குடிக்கலாம். 250 மி.லி என்பது கணக்கு. குழந்தைகள் எனும்பட்சத்தில் வயதுக்கேற்ப 2 - 3 கப் வரை குடிக்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்ப்பாலே நல்லது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com