மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி!

மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி!

மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி!
Published on

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,வேலூர், சிவகங்கை ஆகிய மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. ஜனவரி 14 முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழாக்களை நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை மாவட்டத்தின் 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சிவகங்கையில் 1 இடத்திலும் வேலூரில் 25 இடங்களிலும், கிருஷ்ணகிரியில் 3 இடங்களிலும், திருப்பத்தூரில் 13 இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com