HeadLines|’பாரபட்சமான பட்ஜெட்’-எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் To ராயன் சிறப்புக்காட்சிக்கு அனுமதி

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் முதல் நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் வரை உள்ளிட்டவற்றை பற்றி விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்.

  • மத்திய அரசின் பட்ஜெட் பாஜக ஆட்சியை காப்பாற்றுமே தவிர நாட்டை காப்பாற்றாது என்றும் விமர்சனம்.

  • பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுவதாக, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டனர்.

  • பட்ஜெட்டில் 2 தட்டுகளில் மட்டும் பகோடாவும், ஜிலேபியும் தந்துவிட்டு மற்ற தட்டுகளை காலியாக விட்டுள்ளது என பாஜகவை மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்.

  • மாநிலங்களின் பெயரை உச்சரிக்காததால் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பதா என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்காக 6 ஆயிரத்து 362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.

  • 4ஆவது ரயில் முனையம் நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

  • நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தவகையில், நுழைவுத் தேர்வுகளை மீண்டும் மாநில அரசே நடத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

  • இந்தியாவில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்டது சனி சந்திர கிரகணம். சிவப்பு நிறத்தில் தோன்றிய நிலவை கண்டு வானியல் ஆர்வலர்கள் ரசித்தனர்.

  • சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டி படுகொலை செய்த வழக்கில், பெண்ணின் சகோதரருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ வத்திராயிருப்பு வனப்பகுதியில் முழுவதும் பரவிய நிலையில், தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர்.

  • நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் நாளை ரிலீஸ். மேலும், திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

  • நாளை பிரமாண்டமாக தொடங்குகிறது பாரீஸ் ஒலிம்பிக் போட்டி. இன்று நடைபெறும் தரவரிசை போட்டிகளில் பங்கேற்கிறது இந்திய வில்வித்தை அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com