30 ஆண்டுகளுக்கு பின் மாற்றம் கண்ட வரலாறு; மிசோரத்தில் ஆட்சியைப் பிடித்த ஜோரம் மக்கள் இயக்கம்!

மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது.
லால்துஹோமா, ஜோரம்தங்கா
லால்துஹோமா, ஜோரம்தங்காpt web
Published on

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விழாக்கள் இருப்பதாலும் வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. அதன்படி, மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

மிசோரம்
மிசோரம்pt web

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடந்தது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ், மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் போன்ற கட்சிகள் 40 தொகுதிகளில் போட்டியிட்டன. பாஜக 23 தொககுதிகளில் போட்டியிட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி என்ற இரு கட்சிகளின் முதல்வர்களே ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனால் இந்த தேர்தலில் நிலை மாறியுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜோரம் மக்கள் இயக்கம் தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. 40 தொகுதிகளில் 27 தொகுதிகளைக் கைப்பற்றி ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக அக்கட்சியின் தலைவர் லால்துஹோமா பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசோ தேசிய முன்னணி 9 இடங்களில் வென்று ஓர் இடத்தில் மட்டும் முன்னிலையில் இருந்தது. பாஜக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. மிசோரம் மாநிலத்தின் முதல்வரான ஜோரம்தங்கா ஜோரம் மக்கள் இயக்க வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

ஜோரம் மக்கள் இயக்கத்தின் வேட்பாளரான லால்தன்சங்கா 10727 வாக்குகள் வாங்கி இருந்த நிலையில், ஜோரம்தங்கா 8626 வாக்குகளை மட்டுமே வாங்கி 2101 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com