பொருளாதார மந்த நிலைக்கு காங்கிரஸ் ஆட்சி மட்டும்தான் பொறுப்பா?: யஷ்வந்த் சின்ஹா கேள்வி

பொருளாதார மந்த நிலைக்கு காங்கிரஸ் ஆட்சி மட்டும்தான் பொறுப்பா?: யஷ்வந்த் சின்ஹா கேள்வி
பொருளாதார மந்த நிலைக்கு காங்கிரஸ் ஆட்சி மட்டும்தான் பொறுப்பா?: யஷ்வந்த் சின்ஹா கேள்வி
Published on

நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை மட்டும் குறை சொல்ல முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா தனியார் நாளிதழுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில், “பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டார்கள். இந்தியாவில் வறுமை அதன் கடைசி நிலைக்கு வந்துவிட்டது என்கிறார் பிரதமர் மோடி. அந்த பொய்யை காப்பாற்ற அருண்ஜேட்லி ஓவர்டைம் பார்த்து வருகிறார். இந்தியாவின் பொருளாதாரம் இறங்குமுகத்தில் உள்ளதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லியே பொறுப்பு. இந்த சூழலிலும் இதை சொல்லவில்லையென்றால், நான் நாட்டிற்கு ஆற்றும் கடமையில் தவறியதாக ஆகிவிடும் ” என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். 

பா.ஜ.வின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா, அக்கட்சியின் தலைமையில் உள்ள மோடி, அருண்ஜேட்லியை கடுமையாக தாக்கி எழுதியிருந்ததை ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இந்தநிலையில், யஷ்வந்த் சின்ஹா மீண்டும் பா.ஜ.க. தலைமைக்கு எதிராக கருத்தினை தெரிவித்துள்ளார்.

இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பொருளாதார மந்த நிலைக்கு காங்கிரஸ் ஆட்சியை மட்டும் குறை சொல்ல முடியாது. நமக்கு ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. நான் 2014 வரை செய்தி தொடர்பாளராக இருந்த போது, காங்கிரஸ் அரசின் பொருளாதார கொள்கைகளின் முடக்கம்தான் வீழ்ச்சிக்கு காரணம் என்று அவர்கள் குறை சொல்லி வந்தார்கள். பொருளாதார வீழ்ச்சி குறித்த எனது கருத்தினை தெரிவிக்க ஒரு வருடத்திற்கு முன்பே பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால் இன்றுவரை எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com