யமுனா நதி மீண்டும் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.
தொடர்மழை காரணமாக யமுனா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நதியின் நீர்மட்டம் 205 புள்ளி 33 மீட்டரை எட்டினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகும். இன்று காலை நிலவரப்படி யமுனா நதியின் நீர்மட்டம் 205 புள்ளி 30 மீட்டராகவுள்ளது. எந்தநேரமும் வெள்ளம் ஊருக்குள் புகும் சூழல் உருவாகியுள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த 100க்கும் அதிகமான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.