இறந்துபோன ஒருவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா தொழிலாளி ஒருவர் மீது கடந்த 20-ஆம் தேதி கார் மோதியதால் அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து மீரட் பகுதியில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். ஆனால் அவர் இறந்த பின்பும் கூட அவரது உடலுக்கு எக்ஸ்ரே செய்ய மருத்துவர்கள் பரிந்தரைத்துள்ளனர். அதன்படி எஸ்க்ரேயும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் வெளியே தெரியவர இதுகுறித்து உரிய விசாரணைக்கு மருத்துவமனையின் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்ட 11 மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிக்கவும் அவர் கோரியுள்ளார்.
பொதுவாக ஒருவர் இறந்தால் என்ன காரணத்திற்காக..? எப்படி..? அவரின் உயிர் பிரிந்தது என்பதை கண்டறியே பிரேத பரிசோதனை செய்யப்படும். ஆனால் இங்கு இறந்த மனிதருக்கு எஸ்க்ரே மேற்கொள்ளப்பட்டிருகிறது. இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.